சீனாவில் இஸ்லாமிய தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் : 11 தீவிரவாதிகள் பலி

Written by vinni   // February 14, 2014   //

5232079127d51சீனாவின் சின்ஜியாங் மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. இதனை தனி மாநிலமாக பிரித்து தர வலியுறுத்தி அல்கொய்தாவுடன் தொடர்புடைய கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் போராடி வருகிறது. இஸ்லாமிய தீவிரவாத குழுவினருக்கும், காவல்துறைக்குமிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

இந்நிலையில், சின்ஜியாங் மாகாணம் வுஷி பகுதியில் இன்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை நோக்கி கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த இஸ்லாமிய தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

நீண்ட நேரம் நீடித்த இந்த மோதலில் 8 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர். மூன்று தீவிரவாதிகள் தற்கொலைப்படை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் தங்கள் கார்களிலிருந்த இயற்கை எரிவாயு சிலிண்டர்களை வெடிகுண்டாக பயன்படுத்தி வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

சீனாவின் உயர் அதிகாரிகளுடன் மனித உரிமை பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பெய்ஜிங் வந்துள்ள சமயத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

2012ம் ஆண்டில் மட்டும் சின்ஜியாங் மாகாணத்தில் 190 தீவிரவாத தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.