திருமணத்திற்கு மறுத்ததால், 19 வயது பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபன்

Written by vinni   // February 14, 2014   //

bloody_knife_528564029பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் திருமணத்திற்கு மறுத்ததால், 19 வயது பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபரின் கொடூரமான செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் தலைநகர் லாகூருக்கு அருகிலுள்ள பகவல்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் பஷீர் அஹமது. அதே கிராமத்தில் விவசாயம் செய்து வரும் நதீம் என்ற வாலிபர் பஷீரின் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். இதற்கு பஷீர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நதீம், அவருடைய தந்தை மற்றும் கூட்டாளிகளுடன் பஷீரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் மகளை சித்ரவதை செய்துள்ளார். பின்பு நதீம் பஷீரின் மகளின் மூக்கை அறுத்து, ‘என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த நீ இனி வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ள முடியாது’ என்று சத்தம் போட்டுவிட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து, அந்த வாலிபரின் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இன்னும் அவரை கைது செய்யவில்லை.


Similar posts

Comments are closed.