பிள்ளைகள் தமது பெற்றோர் மீது அதிகமான நம்பிக்கை வைக்க வேண்டும் – ஜனாதிபதி

Written by vinni   // February 14, 2014   //

mahinda_rajapaksaசமூக வலைத்தளங்கள் ஊடக அறிமுகமாகும் நண்பர்கள் மீது கடுமையான நம்பிக்கை வைப்பது துரதிஷ்டவசமான சம்பவங்களுக்கு காரணமாகக் கூடும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிள்ளைகள் தமது பெற்றோர் மீது அதிகமான நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

கொழும்பு 12 பாத்திமா முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் புதிய கட்டிடம் ஒன்றை நேற்று மாலை திறந்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பிள்ளைகளுக்காக அரசாங்கத்தினால் கொடுக்க முடிந்த மிகப் பெரிய சொத்து கல்வியாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.