பாகிஸ்தான் அணியில் புதிய மாற்றங்கள்

Written by vinni   // February 13, 2014   //

pakistan cricket teamநிதி மோசடி தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஸகா அஷ்ரவ் அதிரடியாக நீக்கப்பட்டதை தொடர்ந்து அணியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம் பாகிஸ்தானின் புதிய பயிற்றுவிப்பாளராக மொயின் கான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் தேர்வுக்குழுவின் தலைமை நிர்வாகியான அமிர் சொஹைல் நீக்கப்பட்டு, முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸார் கான் இடைக்கால நிர்வாக தெரிவுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8 பேர் அடங்கிய நிர்வாகக்குழுவினால் இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

உலக கிண்ண இருபதுக்கு-20 போட்டிகளுக்கான புதிய களத்தடுப்பு பயிற்றுனராக சொயப் மொஹமட் தெரிவாகியுள்ளார்.


Comments are closed.