ஐபிஎல் ஏலம்! இன்று அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள்

Written by vinni   // February 13, 2014   //

ipl7வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடக்கிறது.

சர்வதேச அளவில் பங்கேற்காத வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டனர்.

இதில் இந்தியாவின் உள்ளூர் வீரர்களுக்கு அதிக முக்கியதுவம் அளிக்கப்பட்டது.

ரிஷி தவான் ரூ. 3 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது, 20 லட்சம் அடிப்படை ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்த இவருக்கு ரூ. 2.80 கோடி அதிகமாக ‘ஜாக்பாட்’ அடித்தது.

தொடர்ந்து நடந்த ஏலத்தில் கரண் சர்மாவை ரூ. 3.75 கோடிக்கு அதிகபட்சமாக ஐதராபாத் அணி வாங்கியது.

இன்று ஏலத்தில் அதிவிலைக்கு ஏலம் போன டாப் வீரர்களின் பட்டியல்

1. கரண் சர்மாவை 3.75 கோடிக்கு ஐதராபாத் அணி வாங்கியது.

2. ரிஷி தவானை பஞ்சாப் அணி 3 கோடிக்கு வாங்கியது.

3. கேதர் ஜாதவை டெல்லி அணி 2 கோடிக்கு வாங்கியது.

4. பென் ஹென்ரிக்ஸை 1.8 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.

5. மனீஷ் பாண்டேவை கொல்கத்தா அணி 1.7 கோடிக்கும், ரஜித் பாட்டயாவை ராஜஸ்தான் அணி 1.7 கோடிக்கும் வாங்கியது.

6. மயாங்க் அகர்வாலை 1.6 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.

7. ஆதித்யா தாரேவை மும்பை அணியும், ஈஸ்வர் பாண்டேவை சென்னை அணி 1.5 கோடிக்கு விலைக்கு வாங்கியது.

8. குர்கீரத் சிங்கை பஞ்சாப் அணி 1.3 கோடிக்கும், ஜஸ்பிரீத் பும்ராவை மும்பை அணி 1.2 கோடிக்கும் விலைக்கு வாங்கியுள்ளது.


Similar posts

Comments are closed.