இலங்கையர்கள் ஆயுதங்களை வைத்திருப்பதற்கான தடையை நீடித்தது சுவிஸ்

Written by vinni   // February 13, 2014   //

swiss_flag-415x260சுவிற்சர்லாந்தில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு, சிறிலங்கா உள்ளிட்ட நாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அந்த நாட்டு அரசாங்கம் தொடர்ந்து நீடித்துள்ளது.

அதேவேளை, குரோசியா, மொன்ரனிக்ரோ நாட்டவர்களுக்கு ஆயுதங்களை வைத்திருக்க விதிக்கப்பட்டிருந்த தடையை சுவிஸ் அரசாங்கம் நீக்கியுள்ளது.

சுவிசில், ஆயுதங்களை வைத்திருக்கவும் வாங்கவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய உறுப்பு நாடுகளான குரோசிய மற்றும், மொன்ரனிக்ரோ நாட்டவர்களும் விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்று ஆளும் சமஸ்டி சபை தெரிவித்துள்ளது.

மோதல் சூழல் நிலவும் குறிப்பிட்ட நாட்டவர்கள் சுவிசில் மோதிக் கொள்வதை தடுப்பதற்கும், மோதல் பகுதிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதற்கு சுவிஸ் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கும், சுவிற்சர்லாந்து அரசாங்கம் இந்த தடையை விதித்திருந்தது.

அல்பேனியா, அல்ஜீரியா, பொஸ்னியா – ஹெர்சகோவினா, கொசோவோ, மெசிடோனியா, சேர்பியா, துருக்கி மற்றும் சிறிலங்கா ஆகிய நாட்டவர்களுக்கே ஆயுதங்களை வைத்திருக்க சுவிஸ் தடை விதித்துள்ளது.


Similar posts

Comments are closed.