கன்னி மேரி சிலை அழுகிறது! (வீடியோ இணைப்பு)

Written by vinni   // February 13, 2014   //

mary_statue_crying_004இஸ்ரேலில் கன்னி மேரி சிலை ஒன்று பேசியதாக வந்த தகவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் லெபனான் எல்லையை ஒட்டியுள்ள டர்ஷிஹா என்ற சிறிய நகரத்தில் ஒசாமா கௌரி என்ற குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவரது வீட்டின் வரவேற்பறையில் உள்ள கன்னி மேரி சிலை சமீபகாலங்களாக பளபளப்புடன் இருப்பதை, மனைவி அமிரா பார்த்துள்ளார்.

இதனை சுத்தம் செய்த சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் அந்த சிலையில் எண்ணெய்தன்மை தென்பட்டுள்ளது.

அத்துடன் கன்னி மேரி சிலை தன்னிடம் பேசியதாகவும், தன்னை பயப்பட வேண்டாமென்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தகவல் வெளியே கசிந்துவிடவே, நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து பார்வையிடுகின்றனர்.

மேலும் சிலையின் கன்னத்தில் ஒரு கண்ணீர்துளி திரண்டு வெளிப்பட்டதாகவும், கடந்த வாரம் மட்டும் 2,000க்கும் மேற்பட்டோர் வந்து இந்த சிலையை பார்த்து சென்றுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்


Similar posts

Comments are closed.