ஜேர்மன் எம்.பி.க்கு ஆபாச பட குழுவுடன் தொடர்பா?

Written by vinni   // February 13, 2014   //

cell_sexxஜேர்மனியில் ஆபாச பட குழுவுடன் தொடர்புடையதாக கருதி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவிலான ஆபாச படக்குழு ஒன்று ஜேர்மனியில் இயங்கி வருவதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரான செபாஸ்டியன் இடாத்தியின்(வயது 44) பெயரும், அவரது இணையதள ஐ.பி முகவரியும் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து நீன்பர்க், ஸ்டெட்தாகன் நகர்களில் உள்ள அவரது அலுவலகங்கள், ரேபர்க்கில் உள்ள அவரது வீடுகளில் பொலிசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இச்சோதனையில் என்ன கிடைத்தது என்பது குறித்து தகவல்கள் ஏதுமில்லை, விசாரணையின் ஒரு பகுதியாக தான் நடந்தது என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இது தவறான குற்றச்சாட்டு என்றும், யூகத்தின் அடிப்படையிலானது எனவும் செபாஸ்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது உடல்நிலையை காரணம் காட்டி, 15 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த பண்டேஸ்டாக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


Similar posts

Comments are closed.