பிரிட்டனும், பிரான்சும் எனது மகள்கள்: ஜனாதிபதி ஒபாமா

Written by vinni   // February 13, 2014   //

obama_hollande_005பிரிட்டனும், பிரான்சும் என மகள்கள் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வர்ணித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்த் மூன்று நாள் பயணமாக அமெரிக்கா வந்துள்ளார்.

ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்தபின், வாஷிங்டனில் இருவரும் இணைந்து பத்திரிக்கையாளருக்கு பேட்டி கொடுத்தனர்.

அப்போது பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நட்புறவு குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஒபாமா, எனக்கு மாலியா, சாஷா என்று இரு மகள்கள் உள்ளனர். அவர்களில், ஒருவரை விட்டு மற்றொருவரை மட்டும் தேர்ந்தெடுக்க முடியாது.

அதுபோன்று பிரிட்டனும், பிரான்சும் எனது இரு மகள்களைப் போன்றவை.

இரண்டு நாடுகளும் தனிச்சிறப்புகள் பெற்றுள்ளன, இரண்டு நாடுகளில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.