அனந்தி, ஜெனிவா பயணமானார்?

Written by vinni   // February 13, 2014   //

Ananthy Sasitharan leadவடமாகாண சபையின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளதாக மிகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடனேயே அனந்தி பயணமாகி இருப்பதாகவும் இவ்விருவரும் நேற்று புதன்கிழமை மாலையே பயணமாகிவிட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐ.நாவின் மனித உரிமைப் பேரவைக் கூட்டம் நடைபெறும்போது, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளார் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார்.

இலங்கையில் வடமாகாண சபையின் செயற்பாடுகள், வடக்கில் உள்ள மக்களின் நிலைப்பாடு என்ன என்பவற்றை அறிந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரெட்டே லோஹன் அம்மையாரை முதலமைச்சரைச் நேற்று சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Similar posts

Comments are closed.