போரில் பாதிக்கப்ப​ட்ட மக்களுக்கு நோர்வே உதவ வேண்டும்

Written by vinni   // February 13, 2014   //

arumainayakam_001-450x340போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்களுயை உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வெளிநாடுகள் உதவ வேண்டுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நோர்வே தூதுவரிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டுள்ள நோர்வே நாட்டுத் தூதுவர் இன்று காலை யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

மாவட்டத்தின் துறை சார் நிலைமைகள் தொடர்பாகவும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்திருக்கின்றனர். இதன் போது நிலைமைகள் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு இங்கு பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களிற்கு பல்வேறு தேவைகள் இருக்கின்றன. இதில் குறிப்பாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தற்காலிக வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் உட்பட வாழ்வாதார உதவிகள் என்பன வழங்கப்பட வேண்டியிருக்கின்றது.

இத்தகைய பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக பல்வேறு தரப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றோம். எனவே இதற்கு நோர்வேயும் உதவ வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தேன்.

இத்தகைய நிலைமைகளை அறிந்துள்ளதாகவும் கோரிக்கைகளை சாதகமாக பரிசீலிப்பதாகவும் நோர்வே தூதுவர் தெரிவித்துள்ளதாகவும் அரச அதிபர் கூறினார்.


Similar posts

Comments are closed.