குழந்தைகளுடன் செல்லும் போது சிகரெட் பிடிக்க தடை

Written by vinni   // February 13, 2014   //

smoking-11300பிரித்தானியாவில் காரில் குழந்தைகளை அழைத்து செல்லும்போது பெற்றோர் சிகரெட் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.

சிகரெட் பிடிக்க பல்வேறு நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என சுகாதார ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆதரவாளர்களும் பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

அத்துடன் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினரும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இதனையடுத்து முதற்கட்டமாக அரசு சிகரெட்டுகள் பயன்படுத்துவதற்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளது.

இதில் பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து செல்லும்போது காருக்குள் புகைக்க கூடாது என தடை விதித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்பாக இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதில் அரசு மிக தீவிரமாக உள்ளது.

ஆனால் தனிமனித சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாக உள்ளது என சில எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.