ஜெனிவா பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டும்

Written by vinni   // February 13, 2014   //

17TH_RAJYA_SABHA_1301592fஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச மட்டத்திலான சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட உள்ள யோசனைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அவுஸ்திரேலிய செனட் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டிலும் கிறீன் கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனையே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை சம்பந்தமாக சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேச சமூகத்திற்கு செய்தி வழங்கப்பட்டுள்ளதாக கிறீன் கட்சியின் தலைவர் கிறிஸ்டினோ மில்னி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளை சம்பந்தமாக கொடூரமான கொள்கைளை பின்பற்ற வேண்டும் என்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் பிரதமர் டோனி அபேட் கொண்டிருக்கும் பற்றுதியான தன்மையை கைவிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை சர்வதேச போர் குற்றம் சம்பந்தமான விசாரணைகளில் அவுஸ்திரேலியாவின் நிலைப்பாடு எப்படியானது என்பதை அறிய உலகம் காத்திருப்பதாக செனட் உறுப்பினர் லீ ரியானோன் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக அவுஸ்திரேலிய பிரதரும், வெளிவிவகார அமைச்சர் ஜூலியா பிசோப் ஆகியோர் சர்வதேச சமூகத்திற்கு அவுஸ்திரேலியாவின் நிலைப்பாடு தொடர்பில் முக்கிய செய்தியை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சம்பந்தமாக முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு ஆதரவு வழங்கிய அவுஸ்திரேலியா எதிர்வரும் மார்ச் மாதம் ஆதரவளிக்காமல் இருப்பது பாதிப்பானது எனவும் அவர் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.