இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் சீனா

Written by vinni   // February 12, 2014   //

Flag of the People's Republic of Chinaஇலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என சீன வெளிவிவகார அமைச்சர் வேங் யீ (றுயபெ லுi) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சுதந்திரம், இறைமை மற்றும் பௌதீக ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்கும் இலங்கை அரசாங்கத்தின் முனைப்புக்களுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் தங்களது உள்விவகாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பவர்கள் என்பதனை சீனா நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சீனாவின் துணைப்பிரதமர் லீ யுவான்சோவை சந்தித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என லீ தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.