பெண் ஒருவரை 15 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக வைத்திருந்த நபர் கைது

Written by vinni   // February 12, 2014   //

man_arrest_002அமெரிக்காவில் தனது உறவுக்கார பெண்ணை 15 ஆண்டுகளாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவூல் ஓசுவா(வயது 52).

தனது உறவுக்கார பெண்ணுக்கு 12 வயதாக இருந்ததில் இருந்தே, வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

கட்டாயப்படுத்தி அங்கேயே தங்க வைத்து, தொடர்ந்து 15 ஆண்டுகளாக இவ்வாறு செய்து வந்துள்ளார்.

இதுபற்றி ரவூலின் குடும்பத்திற்கு தெரிந்திருந்தும், பொலிசில் புகார் செய்யவில்லை.

இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 வயதாக இருக்கும் போது தப்பிச்செல்ல குடும்பத்தினர் உதவி செய்துள்ளனர்.

தப்பிச்சென்ற பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

வழக்குபதிவு செய்த பொலிசார் குறித்த நபரை கைது செய்தனர், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


Similar posts

Comments are closed.