இலங்கைக்கு எதிரான பிரேரணை நிச்சயம் நிறைவேறும்: பிரித்தானியா நம்பிக்கை

Written by vinni   // February 12, 2014   //

britonஇலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச்சில் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை நிறைவேற்றப்படும் என்று பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தப் பிரேரணையை அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து சமர்ப்பிக்கவுள்ளன.

தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் மற்றும் சியோப்ஹெய்ன் ஆகியோர், பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அந்த நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய நாடுகளின் சிரேஸ்ட பிரதிநிதிகளை சந்தித்து பிரேரணை தொடர்பான பிந்திய தகவல்களை பெற்றுள்ளனர்.

போர்க்குற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வித முன்னேற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

எனவே பிரித்தானிய அரசாங்கம், சர்வதேச நட்பாளர்களுடன் இணைந்து சர்வதேச விசாரணை ஒன்றுக்கான நடவடிக்கைகளை எடுக்கப்பதாக தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதுவே இலங்கைக்கு எதிராக செயற்பட வேண்டிய தருணம் என்று பிரித்தானியா நினைப்பதாகவும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி குழு குறிப்பிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.