பேஸ்புக்கில் வெளியாகிய புகைப்படத்தால் 16 வயது மாணவி தற்கொலை

Written by vinni   // February 12, 2014   //

facebook-eye_2459156bமுகநூலில் பிரசுரமான புகைப்படம் ஒன்று காரணமாக குருநாகல் பிரதேசத்தில் மாணவியொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். முகநூலில் பிரசுரமான புகைப்படம் காரணமாக மன வேதனை அடைந்த குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16 வயது பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.முகநூலில் பிரசுரமாகியிருந்த புகைப்படம் தொடர்பில் பாடசாலையில் விளக்கம் கோரப்பட்டதாகவும் பெற்றோரிடம் இவ்வாறு விளக்கம் கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முகநூலில் பிரசுரமான புகைப்படம் தொடாபில் பாடசாலையின் அதிபர் பெற்றோரை அழைத்து விளக்கம் கோரியுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த மாணவி வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்படி மேலும் தெரியவருவதாவது,

குருநாகல் பாடசாலை ஒன்றில் 11ம் தரத்தில் கல்வி பயிலும் விதூசா என்ற மாணவி தொடர்பான புகைப்படம் ஒன்று முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த மாணவி ஒரு ஆணுடன் நிற்பது போன்றே அப்புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஆண், மாணவியின் காதலன் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த புகைப்படத்தை அவதானித்த பாடசாலை அதிபர் மாணவியை அழைத்து கடுமையாக திட்டி எச்சரித்துள்ளதுடன் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்து வரும்படி பணித்துள்ளார்….!

நேற்று மாலை பாடசாலை முடிந்து வீடு சென்ற மாணவி பெற்றோரிடம் இவ்விடயத்தை கூறாமல் தனது அறைக்குள் சென்று சேலை ஒன்றின் உதவியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.


Similar posts

Comments are closed.