சூதாட்டத்தில் தொடர்புடைய வீரர்கள் யார்?

Written by vinni   // February 11, 2014   //

money6வது ஐபிஎல் டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பாக நீதிபதி முகுல் முட்கல் தலைமையில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி, அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில் 6 இந்திய வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக முகுல் கமிட்டி அறிக்கையில் கூறியிருப்பதாவது, வீரர்களுக்கும், சூதாட்ட தரகர்களுக்கும் இடையே நடந்த பேரம் தொடர்பான டேப் ஆதாரத்தை, விளையாட்டு டேப் இதழை பதிவு செய்யும் பத்திரிகையாளரிடம் காண்பித்தோம்.

அவர் வீரர்களின் குரல்களை அடையாளம் கண்டறிந்தார். அதில் ஒரு வீரர் உலக கிண்ண போட்டிக்கான அணியில் இடம் பெற்றவர்.

தற்போது இந்திய அணியில் விளையாடி வருகிறார், அந்த வீரர்களின் விவரங்களை சீல் வைக்கப்பட்ட உறையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 வீரர்களில் 2 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் ஆவார்கள், சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணையின் போது சூதாட்டத்தில் தொடர்புடைய இந்திய வீரர்கள் யார் என்ற விவரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.