யுவராஜ் உள்ளே! இஷாந்த் சர்மா வெளியே

Written by vinni   // February 11, 2014   //

dhoni_esanthsharma_002ஆசிய கோப்பை மற்றும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 25ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை நடைபெறுகிறது. அதேபோல 20 ஓவர் உலக கோப்பை போட்டி மார்ச் 16ம் திகதி முதல் ஏப்ரல் 6ம் திகதி வரையிலும் வங்கதேசத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான இந்திய அணி பெங்களூருவில் இன்று அறிவிக்கப்பட்டது. 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து இஷாந்த் சர்மா நீக்கப்பட்டுள்ளார், மேலும் யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து ரெய்னா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய கோப்பை அணி

டோணி (அணித்தலைவர்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கோலி, புஜாரா, அம்பதி ராயுடு, ரஹானே, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது சமி, வருண் ஆரோன், ஸ்டூவட் பின்னி, அமீத் மிஸ்ரா, ஈஸ்வர் பாண்டே.

20 ஓவர் உலக கோப்பை அணி

டோணி (அணித்தலைவர்), தவான், ரோகித் சர்மா, வீராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ரஹானே, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது சமி, வருண் ஆரோன், ஸ்டூவட் பின்னி, அமீத் மிஸ்ரா, மோகித் சர்மா.


Similar posts

Comments are closed.