மெக்சிகோ பொலிசாரின் சாதனை

Written by vinni   // February 11, 2014   //

mexico_police_arrest_002மெக்சிகோவின் முக்கிய போதைப்பொருள் கடத்தல் மன்னனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மெக்சிகோ, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து திருட்டுத்தனமாக அதிகளவான போதைப்பொருட்கள் அமெரிக்காவுக்கு கடத்தப்படுகின்றன.

இதில் மெக்சிகோவை சேர்ந்த மார்டினாஸ் சான்ஷேஸ் என்பவன் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டான், இவனது தலைமையில் பெரிய கூட்டமே போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தது.

கடந்த 2000- 2003ம் ஆண்டுகளுக்கு இடையே மட்டும் சுமார் 76 டன் போதைப்பொருளை கடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து கடத்தல் மன்னனை பிடித்துக் கொடுத்தாலோ, அவனைப் பற்றி தகவல் தெரிவித்தாலோ ரூ.30 கோடி பரிசு தரப்படும் என அமெரிக்க பொலிசார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது மார்டினாவை பொலிசார் கைது செய்துள்ளனர், இது மிகப்பெரிய சாதனை என மெக்சிகோ உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.