இரத்த வெள்ளத்தில் மிதந்த தம்பதியினர்

Written by vinni   // February 11, 2014   //

canadian_couple_murdered_002கனடாவை சேர்ந்த தம்பதியினர் மெக்சிகோவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் ஓய்வு பெற்ற வெளிநாட்டவர்கள் தங்கும் மிக பிரபலமான இடத்தின் வீடொன்றில் நீனா டிஸ்கொம்பே(72) எட்வேட் குலார்(84) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த வார இறுதிநாட்களில் இத்தம்பதியினர் மர்ம நபர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டு கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டனர் என மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்களது வீடு சூறையாடப்பட்டதுடன், கார்களும் களவாடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

தோட்டக்காரனால் தகவலளிக்கப்பட்டு, நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இவர்களை அடையாளம் காட்டியுள்ளனர் என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அரசு வழக்கறிஞர்கள் மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கனடிய அரசாங்கம், இது ஒரு நாடு தழுவிய ஆலோசனை இல்லை என்றாலும் மெக்சிக்கோவிற்கு பயணம் மேற்கொள்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என பயணிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.


Similar posts

Comments are closed.