நான் நெல்சன் மண்டேலாவின் மகள் : உரிமை கோரும் பெண்

Written by vinni   // February 11, 2014   //

mandela_daughter_001மறைந்த முன்னாள் ஜனாதிபதி மண்டேலாவின் மகள்கள் என இரண்டு பெண்கள் உரிமை கொண்டாடியுள்ளனர்.

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி மரணமடைந்தார்.

இவரது உயில் சமீபத்தில் வெளியிடப்பட்டது, இதில் தனது சொத்துக்களை வாரிசுகள், உதவியாளர்கள் மற்றும் கட்சிக்காக எழுதி வைத்துள்ளார்.

இதன்படி மண்டேலாவுக்கு 6 குழந்தைகள் உள்ளனர், இதில் 3 பேர் இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது மகள்கள் என உயிலில் அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்படாத 2 பெண்கள் உரிமை கோரியுள்ளனர்.

இவர்களில் ஒருவர் பெயர் போபுளூ(வயது 63), மற்றொருவர் ஒனிகா மொதாவோ(வயது 60).

டி.என்.ஏ பரிசோதனை மூலம் அவரது மகள் என்பதை நிரூபிக்க தான் தாயராக இருப்பதாக ஒனிகா கூறியுள்ளார்.

மேலும் சொத்து தனக்கு தேவையில்லை என்றும், தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு இந்த விவரம் தெரிய வேண்டும் என்பதற்காகவே உரிமை கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தகவலை மண்டேலாவின் உயிலை செயல்படுத்தும் மிச்சேல் கேட்சிடம் கூறியுள்ளார்.

மண்டேலா, எவ்வின் மசே என்பவரை முதலில் திருமணம் செய்தார், அதற்கு முன்பு வேறு பெண்களுடன் ஏற்பட்ட தொடர்பு மூலம் இவர்கள் பிறந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.