சிறு பறவைகளை காவெடுத்த ராட்சத புயல்

Written by vinni   // February 11, 2014   //

birds_died_in france_002பிரான்ஸில் வீசிய கடும் புயலால் ஆயிரக்கணக்கான பறவைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக அதிகளவில் புயல் வீசி வருகின்றது.

பிரான்ஸில் கடந்த 15 நாட்களாக வீசிய கடும் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், 55,000 வீடுகள் இருளில் மூழ்கின.

இந்நிலையில் பப்பிம், கியுல்மோட்ஸ்,ரேசர்பில்ஸ் மற்றும் கிட்டிவேக்ஸ் போன்ற 5,000 க்கும் மேற்பட்ட சிறிய இனப்பறவைகள் இறந்துள்ளன.

இதுகுறித்து தேசிய பறவை பாதுகாப்பு லீக்(National Bird Protection League) கூறுகையில், இப்புயலானது பாதிப்பின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே தான் போகிறது என்றும், அதிகளவான மாசு பிரான்சை சூழ்ந்திருப்பதால் பறவைகள் இறந்ததற்கு வானிலையை மட்டும் காரணம் காட்ட இயலாது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் அட்லாண்டிக் கடலோர பகுதியில் கடந்த 5ம் திகதி வந்த ஸ்பானிஷ் கப்பல் ஒன்று கடல்சீற்றத்தால் சுழன்றடிக்கப்பட்டு இரண்டாய் பிழந்து சுக்கு நூறானது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.