பிரித்தானியாவில் தேம்ஸ் நதி உடைந்தது! ஊருக்குள் வெள்ளம் புகுந்தது

Written by vinni   // February 11, 2014   //

england_storm_026பிரித்தானியாவில் பெய்து வரும் கனமழையால் தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

மிகப்பெரிய தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, இதைத்தொடர்ந்து கரையோரம் இருக்கும் கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டிருப்பதால், தேம்ஸ் நதியின் சில கரைகள் உடைந்து விட்டன.

இதனால் லண்டன் அருகேயுள்ள பெர்க்ஷர், சுர்கி ஆகிய நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்தது, அவை மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவ அப்பகுதியில் 14 வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, மக்கள் வசிக்கும் பகுதிகளில் 2 அடி உயரத்துக்கும் மேலாக தண்ணீர் தேங்கி நிற்கிறது, மீட்புப்பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் டேவிட் கமரூன், துணை பிரதமர் நிக்கிலாக் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர், நிவாரண பணிகளை முடுக்கி விட்டனர்.

கடந்த 1980 மற்றும் 1990-ம் ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தேம்ஸ் நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.