மன்னார் நகரப் பகுதியில் பல அபிவிருத்திப் பணிகள்

Written by vinni   // February 11, 2014   //

mannநகர சபை உறுப்பினர் தெரிவிப்பு எதிர்காலத்தில் மன்னார் நகர சபையினால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார் மன்னார் நகரசபையின் ஆளும்கட்சி உறுப்பின ரான இரட்ணசிங்கம் குமரேஸ். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

மன்னார் நகரசபை பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப் பாக போருக்குப் பின்னரான இந்தக் காலப் பகுதியில் நீண்ட காலத்துக்குப் பின்னர் மன் னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் செயற்படத் தொடங்கியுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல சவால்களின் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் நிர்வாகத்தைக் கொண்டு செல்வதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன.

ஆட்சியைப் பிடித்திருந்தாலும் தமது சேவைகளை வழங்குவதற்கு உள்ளூராட்சி மன்றங் களில் போதிய அளவு நிதியில்லை. இவ்வாறான சூழ்நிலையில் விமர்சனங்களையும் தாண்டி குறித்த நிர்வாகங்கள் தமது சேவைகளை மக்கள் மத்தியில் முன்னெடுத்து வருகின்றன.

இதன் பிரகாரம் மன்னார் நகரசபை பல்வேறு திட்டங்களின் ஊடாகப் பெறப்பட்ட நிதியை நகர அபிவிருத்திக்கெனச் செலவிட்டு வருகிறது.

இதற்கு உறுதுணையாக அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் மன்னார் நகரசபைக்கு அனுசரணை வழங்கி வருகின்றன.

இதன் அடிப்படையில் உள்ளக வீதிகள், கடைத்தொகுதிகள், பொது மலசலகூடங்கள், தனி யார் போக்குவரத்து நிலையம் என்பன அமைக்கப்பட்டன.

மேலும் சேமக்காலை புனர மைப்பு, கழிவுப் பொருள்களை பசளையாக்கும் திட்டம், மன்னார் சிறுவர் பூங்காவின் அபி விருத்தி, கிராமங்களின் உள்ளக வீதிகளை கொங்கிறீட் வீதிகளாகத் தரமுயர்த்தல், தாழ் நிலப்பகுதியில் வடிகால் அமைப்புகள் போன்ற பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன.

இதேவேளை 500க்கும் அதிகமான தெருவிளக்குகள் மன்னார் நகரசபையின் நிதியில் இலங்கை மின்சாரசபையுடன் இணைந்து மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து அவை பராமரிக்கப்பட்டும் வருகின்றன.
இதேவேளை எதிர்காலத்தில் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு மன்னார் நகரசபை திட்டமிட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.