ஐ.நா பிரதிநிதி வடக்கிற்கு விஜயம்!

Written by vinni   // February 11, 2014   //

un tk 01இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் உதவி செயலாளரும் அந்த அமைப்பின் அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய பசுபிக் பணிப்பாளருமான ஹவூலிஹேங்க் சூ இன்று வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

முல்லைத்தீவுக்கு இன்று மதியம் விஜயம் செய்த அவர் ஐ.நாவின் நிதியுதவியில் அங்கு இயங்கி வரும் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டுள்ளார்.

இதனையடுத்து கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் அவர், அந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஐ.நாவினால் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயவுள்ளார்.


Similar posts

Comments are closed.