சர்வதேச சக்திகளே பிள்ளைகளுக்கு செவி கொடுங்கள்: ஜனாதிபதி வேண்டுகோள்

Written by vinni   // February 11, 2014   //

president_mahinda_rajapaksaதெற்கில் இருந்து வடக்கிற்கும் வடக்கில் இருந்து தெற்கிற்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் பயணிக்க முடியாத நிலைமை காணப்பட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கல்விமைச்சு கீழ் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை அமுல்படுத்திய பாடசாலைகளுக்கு விருது மற்றும் அன்பளிப்புகளை வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அடிப்படைவாத ரீதியில் சிண்டு மூட்டும் விடயங்களை கேட்காது இலங்கையில் உள்ள பிள்கைளுக்கு செவி கொடுக்குமாறு சர்வதேச சக்திகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

நாட்டில் உள்ள சகல இனங்களும் ஒன்றிணையும் போது இந்த நாட்டை எவராலும் ஆக்கிரமிக்க முடியாது.

உயிரை இரண்டாம் பட்சமாக கருதி தமது தாய் நாட்டை பாதுகாத்த நபர்கள் நாட்டின் வரலாற்றில் இருந்துள்ளனர். நாட்டின் பிள்ளைகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள கூடியவர்களாகவும் சவால்களை வெற்றிக்கொள்ளக் கூடியவர்களாகவும் மாற வேண்டும்.

நாட்டில் உள்ள பிள்ளைகள் தாம் விரும்பிய இனத்தை சேர்ந்த நண்பர்களுடன் பழக வேண்டும். தவறுகளை திருத்தி முன்னோக்கி செல்ல வேண்டும் என நாட்டு பிள்ளைகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.


Similar posts

Comments are closed.