இந்தியாவின் வெற்றிக் கனவை தகர்த்த நடுவர்கள்?

Written by vinni   // February 10, 2014   //

Australia v Sri Lanka - Third Test: Day 3ஆக்லாந்து டெஸ்டில் நடுவர்களின் தவறான தீர்ப்பே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் நடந்தது, இதன் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503, இந்தியா 202 ஓட்டங்கள் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 105 ஓட்டங்களுக்கு சுருண்டது, இதையடுத்து இந்திய அணிக்கு 407 ஓட்டங்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி, ஒரு விக்கெட்டுக்கு 87 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது, புஜாரா(23) ஏமாற்றினார்.

பின் விராத் கோஹ்லி, ஷிகர் தவான் சேர்ந்து பொறுப்பாக ஆடினர்.

சோதி ஓவரில் 3 பவுண்டரி விளாசிய கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் தனது 9வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர் 67 ஓட்டங்கள் எடுத்த போது வாக்னர் பந்தில் ஆட்டமிழந்தார்.

எதிர்முனையில் தன்பங்கிற்கு சோதி பந்தில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் அடித்த ஷிகர் தவான் (115), தனது 2வது சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த ரகானே(18) நடுவரின் தவறான தீர்ப்பால் வெளியேற, தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 270 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

ரோஹித் சர்மா ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரவிந்திர ஜடேஜாவின் துணையுடன் அணித்தலைவர் டோனி துணிச்சலாக போராடினார்.

இவர்கள், ஒருநாள் போட்டி போல் விரைவாக ஓட்டங்கள் சேர்க்க, இந்திய அணி இலக்கை நோக்கி சீராக முன்னேறியது.

வெற்றி பெற 83 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், பவுல்ட் பந்தில் தேவையில்லாத ஷாட் அடித்த ரவிந்திர ஜடேஜா(26) ஆட்டமிழந்தார்.

டோனிக்கு(39) எதிராக அம்பயர் தீர்ப்பு அமைய, இந்திய அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 366 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

இதற்கு நடுவர்களின் தவறான தீர்ப்பே காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.


Similar posts

Comments are closed.