தோல்வி அடைவதிலும் சாதனை படைத்த டோனி

Written by vinni   // February 10, 2014   //

Mahendra-Singh-Dhoni_12இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெளிநாடுகளில் தோல்வியை சந்தித்து வருகின்றது.

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய அணி 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 0–4 என்ற கணக்கில் இழந்தது.

2 டெஸ்ட் போட்டித் தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் சந்திக்கும் 10வது தோல்வியாகும்.

இந்திய அணி கடைசியாக 2011ம் ஆண்டு யூன் மாதம் மேற்கிந்தி அணிக்கு எதிரான கிங்ஸ்டன் டெஸ்டில் 63 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்திய அணி வெளிநாட்டு மைதானத்தில் இதுவரை வெற்றி பெறவில்லை.

இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்டிலும், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்டிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்டிலும், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலும் தோற்றது.

இந்த 10 தோல்விகளும் டோனி தலைமையில்தான் கிடைத்தது. அதற்கு முன்பு அவரது தலைமையிலான அணி 2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான செஞ்சூரியன் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களில் தோற்றது.

டோனி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டில் 11 டெஸ்டில் தோற்றுள்ளது. இது மோசமான நிகழ்வாகும். இதற்கு முன்பு கங்குலி, பட்டோடி, அசாருதீன் ஆகியோர் தலைமையில் வெளிநாட்டு மைதானத்தில் இந்திய அணி தலா 10 டெஸ்டில் தோற்று இருந்தது.

அதற்கு அடுத்தபடியாக பிஷன்சிங் பெடி 8 டெஸ்டிலும், கவாஸ்கர், தெண்டுல்கர் தலா 6 டெஸ்டிலும் வெளிநாட்டில் தோல்வியை சந்தித்தன.


Similar posts

Comments are closed.