குளிர் ஜாஸ்தியா இருக்கே! காரை கொளுத்திய நபர்

Written by vinni   // February 10, 2014   //

aarathya_car_001சீனாவில் முன்பின் தெரியாத நபர் ஒருவரின் காரை கொளுத்தி ஆனந்தமாக குளிர் காய்ந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன், நண்பர்களுடன் சேர்ந்து பாருக்கு சென்றுள்ளார்.

நன்கு குடித்துவிட்டு, வெளியே வந்த போது கடும் குளிர் வாட்டி வதைத்தது.

எதையாவது கொளுத்தி குளிர் காய்ந்தால் இதமாக இருக்கும் என கருதி, பக்கத்தில் இருந்த கோரைப் பாயை எடுத்து வந்து விலையுயர்ந்த வோக்ஸ்வேகன் காரை கொளுத்தியுள்ளார்.

மளமளவென்று தீ பரவியது, ஆரம்பத்தில் தீ மிதமாக எரிந்த போது, இதமாக குளிர் காய்ந்தனர்.

இதன்பின் காரில் இருந்து வெடித்து சிதறிய தீப்பிழம்புகளின் வெம்மையை தாக்குப் பிடிக்க முடியாமல் மூலைக்கு ஒன்றாக பிரிந்து ஓடினர்.

இத்தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும், பொலிசாரும் சம்பவ இடத்திலேயே விரைந்து வந்தனர்.

இது எப்படி நடந்தது என்பதை யூகிக்க முடியாத பொலிசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கமெராவை ஆராய்ந்ததில், வாலிபனை கண்டறிந்தனர்.

அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குற்றவாளியை பொலிசார் கைது செய்தனர்.


Similar posts

Comments are closed.