ஜெனீவாவில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யத் தயார் – மஹிந்த சமரசிங்க

Written by vinni   // February 10, 2014   //

makinth samarasingaஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்யத் தயார் என பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்மை அமர்வுகளில் பங்கேற்குமாறு பணித்தால் பங்கேற்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற முக்கியமான அமர்வுகளில் மஹிந்த சமரசிங்க இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினை வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ஜெனீவா செல்லும் குழு தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பார் எனவும், தேவை ஏற்பட்டால் பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை வகிக்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முதல் இன்று வரையில் பாரியளவில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சில நாடுகள் இலங்கையின் முன்னேற்றத்தை ஏற்றுக்கொள்ளாது, மத்திய கிழக்கில் சில நாடுகளில் மேற்கொண்டதனைப் போன்று இலங்கையையும் மாற்ற முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் எந்த காரணத்திற்காகவும் படையினரை காட்டிக்கொடுக்காது எனவும், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த எவருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.