அதிகம் சாப்பிட்டதால் வந்த ஆபத்து

Written by vinni   // February 10, 2014   //

gastric_bypass_001சீனத் தலைநகரான பீஜிங்கில் நடந்த விநோதமான சம்பவம் ஒன்றில் மது அருந்தியபின், அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த போது அவரது வயிறு வெடித்தது.

58 வயதான அப்பெண் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதில் அவரின் கீழ்வயிற்றில் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது வயிறு வெடித்து வாயு வெளியாகி தீ பிழம்பு தோன்றியதாக கூறப்படுகிறது. அவரது வயிற்றில் உள்ள குடல் முழுவதையும் அகற்ற முடிவு செய்துள்ளதாக நான்ஜிங் டிரம் டவர் மருத்துவமனையை சேர்ந்த வாங் ஹாவ் என்ற மருத்துவர் தெரிவித்தார்.

அவரது வயிற்றில் இருந்த எதில் ஆல்கஹாலுக்கும், அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட மின் அறுவை கத்திக்கும் ஏற்பட்ட தொடர்பினால் இச்சம்பவம் நடந்ததாக ஹாவ் மேலும் கூறினார்.


Similar posts

Comments are closed.