மன்னாரில் அரச- தனியார் போக்குவரத்து துறையினர்களுக்கிடையில் மோதல்!

Written by vinni   // February 10, 2014   //

Private-busesமன்னார் நகரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து துறையில் அரச மற்றும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இரு தரப்பினர்களுக்குமிடையில் திடீர்,திடீர் என முறுகல் நிலை ஏற்படுகின்றது.

அவ்வப்போது இவர்களுக்கிடையில் முறுகல் நிலை, கைகலப்பு, பொலிஸ் முறைப்பாடு, விசாரணை என்று விரிவடைந்து பின் போக்குவரத்து அமைச்சு வரை நீடித்து செல்கின்றது.

அண்மைக்காலமாக வடமாகாணத்தில் போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டு வரும் தனியார் பஸ்கள் தமக்குள்ளும் இலங்கை போக்குவரத்து சபையுடனும் மோதிக் கொள்ளுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் பஸ்கள் ஒன்றிணைந்த நேர சூசி அடிப்படையில் சேவையில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றன.

இதனால் பயணிகள் பல்வேறு இடர்களுக்கும், தாமதமான பயணங்களுக்கும் முகம் கொடுப்பதாக விசனம் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.