இந்த நாட்டை சிறியதாக்கி விட்டேனோ என்று தோன்றுகிறது!– ஜனாதிபதி

Written by vinni   // February 10, 2014   //

president_mahinda_rajapaksaஇந்த நாட்டை சிறியதாக்கி விட்டேனோ என்று தோன்றுகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச தெரிவித்துள்ளார்.

நான் பேரூந்தில் பயணம் செய்தேன். சொற்ப நேரத்தில் தங்காலைக்கு சென்றேன்.

அதிவேக பாதையில் வேகமாக செல்ல முடிகின்றது.

நாடு சிறியதாகி விட்டதாக தோன்றுகின்றது,

நான் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நாடு சிறியதாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தேட்டையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காரியாலயமொன்றை அங்குரார்ப்பம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து அதிவேக நெடுங்சாலையில் பேரூந்து மூலம் ஜனாதிபதி பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.