இலங்கைக்கு ஆதரவாக ரஸ்யா கருத்து

Written by vinni   // February 10, 2014   //

russiaஇலங்கைக்கு ஆதரவாக ரஸ்யா கருத்து வெளியிட உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மாநாடு ஜெனீவாவில் ஆரம்பாகவுள்ளது.

இந்த மாநாட்டில் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன.

இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ரஸ்யா அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, மார்ச் மாதம் 16ம் திகதி அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட உள்ளன.

புலிகளுடன் தொடர்புடைய புலம்பெயர் அமைப்புக்கள் நான்கு மாநாட்டில் கருத்து வெளியிட உள்ளன.

மேற்குலக நாடுகள் இவ்வாறு கருத்து வெளியிட அனுமதியளித்துள்ளன.

இதேவேளை, மேற்குலக நாடுகளின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணியாது என அரச உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.