மன்னார் மனிதப் புதைகுழி தோண்டும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

Written by vinni   // February 10, 2014   //

177255614mannar-puthaikuli1மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியைத் தோண்டும் பணி மீண்டும் இன்று மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ம் திகதி குறித்த பகுதியில் நீர்க்குழாய் பொருத்துவதற்காக நிலம் தோண்டப்பட்டபோது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதனையடுத்து தொடர்ச்சியாக அப்பகுதி தோண்டப்பட்டு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

இதனைத்தொடுந்து கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டன.

இதுவரையில் 19 தடவைகள் குறித்த திருக்கேதிஸ்வரம் மனித புதை குழி தோண்டப்பட்டு, 55 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் எச்சங்களாகவும் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றில் 28 மனித எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டுள்ளன.


Similar posts

Comments are closed.