தவானின் சதம் வீணானது: இந்தியா போராடி தோல்வி

Written by vinni   // February 9, 2014   //

india_newzealand_test2_002நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்து ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்தது.

இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503 ஓட்டங்கள் குவித்தது, பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 202 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி ‘பாலோ-ஆன்’ ஆன போதிலும் நியூசிலாந்து பாலோ-ஆன் கொடுக்கவில்லை.

மாறாக 301 ஓட்டங்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை நியூசிலாந்து தொடங்கியது, 41.2 ஓவர்களில் 105 ஓட்டங்கள் எடுத்தது.

முடிவில் 407 ஓட்டங்களை இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

3-வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 25 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 87 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து 4 நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது.

ஓரளவு சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் 115 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தார்.

அதைதொடர்ந்து புஜார 23 ஓட்டங்களுக்கும், கோஹ்லி 67 ஓட்டங்களுக்கும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியில் 366 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் இந்த தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.


Similar posts

Comments are closed.