சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய சட்டமூலம் நிறைவேற்றம்

Written by vinni   // February 9, 2014   //

Cricket_2சர்ச்சைக்குரிய சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிர்வாக வியூகம் தொடர்பான சட்ட மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.3

சிங்கப்பூரில் கூடிய சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முன்னிலையில் இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிப்பதில் இருந்து இலங்கை விலகியிருந்தது.

நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் எட்டு உறுப்பு நாடுகள் புதிய சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

இந்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகள் பங்கேற்கவில்லை என்று சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாத்தல், ஏனைய நாடுகள் பிரதான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு, நிர்வாக மற்றும் நிதி விவகாரங்கள் தொடர்பிலும் இன்று நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலத்தில் பல்வேறு ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டமூலத்திற்கு அமைய இந்த வருடம் ஜூலை மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாக வியூகத்தில் பிரதான மாற்றங்கள் சில மேற்கொள்ளப்படவுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமைத்துவம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் என். ஸ்ரீனிவாசனுக்கு வழங்கப்படவுள்ளமை முக்கிய மாற்றமாகும்.

இந்த சட்டமூலத்துக்கு அமைவாக இந்தியா இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.