நெல்சன் மண்டேலாவின் காதிற்குள் மறைந்துள்ள முயலை நீக்குமாறு உத்தரவு

Written by vinni   // February 9, 2014   //

563197915ecதென் ஆப்ரிக்க தலைவர், மறைந்த நெல்சன் மண்டேலாவின் வெண்கல சிலையின் காதுக்குள் அனுமதி பெறாமல் வடிவமைத்த முயல் சிற்பத்தை நீக்கும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடி, 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா விடுதலைக்குப் பின் அந்நாட்டின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பதவியேற்றார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின் 95வது வயதில் கடந்த மாதம் காலமானார்.

மண்டேலாவுக்கு அந்நாட்டு அரசு, 30 அடி உயர வெண்கல சிலையை அமைத்துள்ளது. மண்டேலாவின் இறுதி சடங்கு முடிந்த, அடுத்த நாள் இந்தச் சிலை திறக்கப்பட்டது.

இந்நிலையில், மண்டேலாவின் சிலையை வடித்த சிற்பிகள், சிறிய முயல் சிற்பத்தை, சிலையின் காதில் வடிவமைத்திருந்தனர்.

இந்த முயல், தலைவரது சிலைக்கு அவமான சின்னமாக உள்ளதாக, அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதையடுத்து, சிலையின் காதிற்குள் மறைவாக செதுக்கப்பட்ட, முயல் சிற்பத்தை நீக்கும்படி, சிலை அமைத்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.