பிரித்தானிய தமிழ் அமைப்புக்களை சந்தித்த பின்னரே கமரூன் இலங்கை வந்தார்

Written by vinni   // February 9, 2014   //

David-Cameron-007பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பிரித்தானியாவிலுள்ள தமிழ் அமைப்புக்களை சந்தித்ததன் பின்னரே இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்றார் என தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பிரித்தானிய தமிழ் போரம், குளோபல் தமிழ் போரம் உள்ளிட்ட பல தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பத, இலங்கைத் தமிழர் பிரச்சினை, இறுதிக்கட்ட போர், மனித உரிமைகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் போன்ற விடயங்கள் குறித்து தமிழ் அமைப்புக்களுடன் கலந்துரையாடப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது


Similar posts

Comments are closed.