ஐநா உதவிச் செயலாளர் இலங்கை விஜயம்

Written by vinni   // February 9, 2014   //

un tk 01ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளரும் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பணிப்பாளருமான ஹோலியங் சூ இலங்கை வந்தடைந்துள்ளார்.

இரண்டு நாள் விஜத்தை மேற்கொண்டு இவர் நேற்று இலங்கை வந்தடைந்துள்ளார்.

இவர் நாளை அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் பீ.வி. ஜயசுந்தர ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதேவேளை ஐநாவின் உதவி செயலாளர் நாயகம் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார்


Similar posts

Comments are closed.