22 வருடங்களுக்கு பிறகு பேஸ்புக்கால் நடந்த இன்ப அதிர்ச்சி

Written by vinni   // February 9, 2014   //

twins_joins_002பிரான்ஸ் நாட்டில் 22 வருடங்களுக்கு பிறகு இரட்டை சகோதரிகள் பேஸ்புக் உதவியால் ஒன்று சேர்ந்துள்ளனர்.

சுமார் 22 வருடங்களுக்கு முன்னர் பிறந்த ஷிம் மற்றும் பேபினி என்ற இரட்டையர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு தனித்தனியாக தத்து கொடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் 21 வருடங்களாக வளர்க்கப்பட்டபின் ஷிம் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தன்னைப் போலவே உருவம் கொண்ட மற்றொரு 21 வயதுடைய பெண்ணின் புகைப்படத்தையும் அதில், பேபினி என்ற பெயரையும் பார்த்து அவளைக்காண மிகவும் முயற்சித்துள்ளார்.

அவர்கள் இருவரும் தங்களது பேஸ்புக் PROFILE மூலம் தங்களது பிறந்த நாள், இரத்த குரூப் மற்றும் பல கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் இருவரும் இரட்டைச் சகோதரிகள் என்று உணர்ந்து கொண்டனர்.

உண்மை என்னவென்றால், இந்த இரட்டைச் சகோதரிகளை குழந்தைகளாக இருந்தபோது, இவர்களைத் தத்து எடுக்க வந்த பிரெஞ்சு பெற்றோர்களுக்கு தனித்தனியாக இரு சகோதரிகளையும் பிரித்து எடுத்து வேறுவேறு பெற்றோர்களுக்கு கொடுத்தபொழுது இரட்டைச் சகோதரிகள் என்ற உண்மையை பிரெஞ்சுப் பெற்றோருக்கு மருத்துவர்கள் மறைத்து விட்டனர்.

இவர்கள் இருவரும் பிரான்ஸ் நாட்டில் லயான் நகரத்தில் 22 வருடத்திற்குப் பிறகு நேருக்கு நேர் சந்தித்து ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.