பிரெஞ்ச் ஆல்ப்ஸ் பகுதியில் ரயில் விபத்து

Written by vinni   // February 9, 2014   //

alps_train_death_001பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைத்தொடரின் தென்பகுதியில் சுற்றுலா பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டதில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், 9 பேர் காயமடைந்தனர்.
இந்த ரெயில் கடற்கரை நகரமான நைசிலிருந்து டிக்னே-லெ-பெய்ன்ஸ் நகருக்கு சென்றுகொண்டிருந்தபோது பாறை ஒன்று தண்டவாளத்தில் விழுந்ததால் தடம் புரண்டுள்ளது.

தகவல் அறிந்தவுடன் அவசர சேவைப் பிரிவினரும், அருகிலிருந்த தீயணைப்பு படையினரும் மீட்புப் பணியில் இறங்கியுள்ளனர். மொத்தம் 110 தீயணைப்பு வீரர்கள், 32 வாகனங்களுடன் இரண்டு ஹெலிகாப்டர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

விபத்து நடந்த சமயத்தில் அந்த ரயிலில் 34 பயணிகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் இருவர் பலியாகி உள்ளனர். காயமடைந்த 9 பேரில் ஒருவரின் நிலை மோசமாக இருப்பதாகவும், மற்ற எட்டு பேரில் டிரைவர் உட்பட அனைவருக்கும் சிறிய அளவிலான பாதிப்புகளே ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சம்பவம் நடந்த இடம் காட்டுப்பகுதியாக இருந்ததாலும், கடும் பனி நிலவியதாலும் அங்கு செல்வதற்கு மிகவும் சிரமங்களை மேற்கொண்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சென்ற ஆண்டு ஜூலை மாதம் பாரிஸ் நகருக்கு அருகில் நடந்த மற்றொரு ரயில் விபத்தில் ஏழு பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.