பிரித்தானிய குடியேற்றத்துறை அமைச்சர் இராஜினாமா

Written by vinni   // February 9, 2014   //

harper_david_cameron_001பிரித்தானிய குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் ஹார்ப்பர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

சட்டவிரோதமாக துப்புரவு ஊழியரை வேலைக்கு அமர்த்தியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து தனது பதவியை இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை அவர் பிரதமர் டேவிட் கேமரூனிடம் கொடுத்துள்ளார்.

ஹார்ப்பர் தனது ராஜினாமா கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘என் வீட்டில் வேலை செய்த பெண்ணின் குடியுரிமை ஆவணங்கள் தொடர்பாக கடந்த 2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் நான் பரிசோதித்த போது அவை சரியாகவே இருந்தன. தற்போது, எனது அலுவலக அதிகாரிகள் அவற்றை மறுபரிசோதனை செய்த போது இங்கிலாந்தில் தங்கியிருப்பதற்கான குடியுரிமையை அவர் புதுப்பிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

எல்லா சூழ்நிலைகளிலும் நமது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்ட குடிமகனாகவே நான் இருந்து வந்துள்ளேன். பாராளுமன்றத்தின் மூலம் இயற்றப்படும் குடியுரிமை தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய பதவி வகிக்கும் நான், மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதை விட உயர் தகுதிகள் கொண்டவனாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் குடியேற்றத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்துக்கு பதில் அளித்துள்ள பிரதமர் டேவிட் கேமரூன், மன வருத்தத்துடன் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மார்க் ஹார்ப்பருக்கு பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நீங்கள் அரசிலிருந்து விலகி செல்வது மிகுந்த வருத்தத்தை அளித்தாலும் உங்களின் விலகலுக்கான காரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது. நடந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் தனிப்பட்ட முறையில் சோதனைகள் நடத்தியுள்ள போதிலும், குடியேற்றத்துறை அமைச்சர் என்ற முறையில் தவறுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உங்களின் நிலைப்பாட்டினை கெளரரவமான முடிவாக நான் கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மார்க் ஹார்ப்பர் வருங்கால பிரதமர் என பிரித்தானியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.