உயிர் தப்பிய ஜோர்டான் மன்னர்

Written by vinni   // February 9, 2014   //

jordan_mexico_001ஜோர்டான் நாட்டு மன்னர் அப்துல்லா பயணம் செய்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மெக்சிகோ நாட்டில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
மெக்சிகோ நாட்டில், பெயர் வெளியிடப்படாத இடத்திற்கு, ஜோர்டான் நாட்டு மன்னர், ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அந்நாட்டின் கடற்கரை மாகாணமான வெராக்ரூஸில் உள்ள, கியூட்லாஹுவாக்கில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது நிலவிய மோசமான வானிலை காரணமாக, அங்குள்ள பேஸ்பால் மைதானத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தறையிறக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் தரையிறங்கியதும், சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக அருகில் இருந்த விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் என்று கியூட்லாஹுவாக் மேயர் தெரிவித்தார்.

மெக்சிகோ ஜனாதிபதி என்ரிக் பெனா நீட்டோவை மன்னர் அப்துல்லா சந்தித்துப் பேசினார். ஆனால் சந்திப்பின் விவரம் வெளியிடப்படவில்லை.

 


Similar posts

Comments are closed.