இலங்கை செல்வதற்கு கடவுள் துணை புரிவார்!- பாப்பரசர்

Written by vinni   // February 9, 2014   //

1045622934pope_francisஇலங்கைக்கு செல்வதற்கு கடவுள் வழியேற்படுத்துவார் என்று பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். இத்தாலியில் உள்ள் இலங்கையர்களை நேற்று சந்தித்த போதே பாப்பரசர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வருமாறு தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை தாம் வரவேற்பதாகவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

கொழும்பின் பேராயர் கர்தினால் ரஞ்சித்தின் தலைமையிலான குழுவே பாப்பரசரை சந்தித்தது.

இரண்டாம் உலகப் போரின் போது அப்போதைய கொழும்பு பேராயர் ஜீன் மாரி மாசன், கொழும்புக்கு வெளியில் உள்ள தெவத்த என்ற இடத்தில் மேரி மாதாவின் சிலையை நிறுவினார்.

இது குறித்து கருத்துரைத்த பாப்பரசர், மேரி மாதா என்றும் எம்முடன் இருப்பதாக குறிப்பிட்டார். எனவே அவர் தமது பயணங்களுக்கு துணையிருப்பார் என்றும் பாப்பரசர் கூறினார்.

இந்து சமுத்திரத்தின் முத்து என்று கூறப்படும் இலங்கையில் கடந்த காலங்களில் பாரிய பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டன.

இதன் காரணமாக இந்து சமுத்திரத்தின் முத்துவில் இருந்து கண்ணீர் சொரியப்பட்டது.

துரதிஸ்டவசமாக உள்நாட்டு போர் காரணமாக பலர் பாதிக்கப்பட்டதுடன் பாரிய சேதங்களும் ஏற்பட்டன.

இந்தநிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இலகுவான காரியமல்ல.

எதிரியை ஒன்றிணைப்பதற்கு நேற்றைய காயங்களின் வடுக்களும் ஒத்துழைப்புமே துணை புரியும்.

நம்பிக்கை மூலமே சமாதானத்தையும் அபிவிருத்தியையும் அடைய முடியும் என்;றும் பாப்பரசர் குறிப்பிட்டார்.


Similar posts

Comments are closed.