வெள்ளை மாளிகையின் மதில் சுவரை தாண்டி குதிக்க முயன்ற மர்ம நபர்

Written by vinni   // February 8, 2014   //

Tamil-Daily-News-Paper_53441584111அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் மதில் சுவரை தாண்டி குதிக்க முயன்ற மர்ம நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையின் மதில் சுவரின் ஓரமாக நேற்று நடந்து சென்ற ஒரு மர்ம மனிதன், மதில் சுவரின் மீது திடீரென்று ஏற தொடங்கினான்.

இதை தூரத்தில் இருந்து கவனித்து விட்ட உளவுத்துறை பொலிஸார் பாய்ந்தோடி சென்று உள்ளே குதிக்க விடாதவாறு அவனை சுற்றி வளைத்து பிடித்து கொண்டனர்.

அவனிடமிருந்த 2 பைகளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

பைகளுக்குள் வெடிகுண்டு இருக்கும் என்ற அச்சத்தில் வெடிகுண்டு நிபுனர்களுக்கும் வாஷிங்டன் நகர பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, வெள்ளை மாளிகை சிறிது நேரத்திற்கு அவசரமாக மூடப்பட்டது.

குறித்த மர்ம மனிதன் எந்த ஊரை சேர்ந்தவன்? பைகளுக்குள் என்ன வைத்திருந்தான்? என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. தொடர்ந்து அவனிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலத்த காவல் கொண்ட ஒபாமாவின் வீட்டின் மதில் சுவரை மர்ம நபர் ஒருவன் தாண்டி குதிக்க முயன்ற சம்பவம் வாஷிங்டன் நகரவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.