கனடாவில் 29, 400 தொழில் வாய்ப்புகள்

Written by vinni   // February 8, 2014   //

Employment_catசர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தாலும், கனடிய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது.

கனடாவில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பினை மேற்கொண்டிருந்தாலும், 29, 400 தொழில் வாய்ப்புகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன.

இவைகள் அனைத்தும் முழுநேர தொழில் வாய்ப்புகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 7.2ஆக இருந்த வேலையற்றோர் நிலை, 7 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வெளியான கனடிய வங்கியின் அறிக்கையின்படி, கனடா தற்போது ஏற்றுமதி துறையில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு நேர வேலைவாய்ப்புகள் அதிகரித்தது மட்டுமல்லாமல், சுயதொழில் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடியப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவின்படி கிட்டத்தட்ட 28, 300 சுயதொழில்கள் நடைபெறுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றது.

தவிர வணிகம், கட்டிடத்துறை மற்றும் பொதுத்துறை நிர்வாகம் போன்றவையும் கணிசமான அளவு வளர்ச்சியடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.