20 ஓவர் உலக கோப்பை, ஆசிய கோப்பை: இந்திய அணி 13–ந் தேதி தேர்வு

Written by vinni   // February 8, 2014   //

435ac487-14a5-4d83-b041-c546f60664f1_S_secvpfஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) வருகிற 25–ந் தேதி முதல் மார்ச் 8–ந் தேதி வரை வங்காள தேசத்தில் நடக்கிறது. அதை தொடர்ந்து 20 ஓவர் உலக கோப்பை போட்டியும் அங்கு தான் நடைபெறுகிறது. மார்ச் 16–ந் தேதி முதல் ஏப்ரல் 6–ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணி பெங்களூரில் நடைபெறும் இரானி கோப்பை போட்டியின் போது தேர்வு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.

ரஞ்சி சாம்பியனான கர்நாடகா – ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதும் இரானி கோப்பை போட்டி நாளை (9–ந்தேதி) முதல் 13–ந்தேதி வரை பெங்களூரில் நடக்கிறது. இந்தப் போட்டியை தேர்வு குழு உறுப்பினர்கள் 5 பேரும் நேரில் பார்க்கிறார்கள்.

இதன் அடிப்படையில் வீரர்கள் தேர்வு இருக்கும் அந்தப் போட்டி 13–ந்தேதி முடிவடைவதால் அன்று இந்திய அணி தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது. ஒரு வேளை போட்டி முன்னதாக முடிந்தால் அதற்கு ஏற்ற வகையில் தேர்வும் முன்னதாக நடைபெறலாம்.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இறுதி அணியை தேர்வு செய்ய கடைசி நாள் 15–ந்தேதி ஆகும். 20 ஓவர் உலக கோப்பைக்காக 30 பேர் கொண்ட இந்திய தேர்வு அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.


Similar posts

Comments are closed.