இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வங்காளதேச அணிக்கு 467 ரன்கள் இலக்கு

Written by vinni   // February 8, 2014   //

Sri-Lanka-vs-Bangladesh-2013இலங்கை – வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 587 ரன்களும், வங்காளதேசம் 426 ரன்களும் குவித்தன. 161 ரன்கள் முன்னிலையுடன் 4–வது நாளான நேற்று 2–வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 75.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 305 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

36 ரன்னில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த சங்கக்கரா 105 ரன்களும் (144 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), விக்கெட் கீப்பர் தினேஷ் சன்டிமால் 100 ரன்களும் (நாட்–அவுட்) விளாசினர். இதனால் வங்காளதேச அணிக்கு 467 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதை நோக்கி 2–வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.


Similar posts

Comments are closed.